அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படுகிறது. இந்த பேருந்து நிலையத்தில் சமீபகாலமாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. பயணிகளை விரட்டி, விரட்டி தெருநாய்கள் கடிப்பதால் பீதி அடைந்துள்ளனர். சிறுவர்கள், பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் நாய்களை பிடிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளதால் தொடர்ந்து நாய்கள், பயணிகளை அச்சுறுத்தி வருகிறது.
இதுகுறித்து பயணிகள் கூறியதாவது; கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பேருந்து நிலையத்தில் நடந்துச்செல்லும் பயணிகளை விரட்டி, விரட்டி சென்று கடித்துவிடுகிறது. ஏற்கனவே சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார்கள் சொல்லியும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் பயணிகள் அச்சத்துடன் உள்ளனர். எனவே, உடனே பேருந்து நிலையத்தை ஆய்வு செய்து மக்களுக்கு தொந்தரவு கொடுக்கும் தெரு நாய்களை பிடிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.
The post கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளை விரட்டி, விரட்டி கடிக்கும் தெருநாய்கள் கூட்டம் appeared first on Dinakaran.