பெரியகுளம், அக். 19: கும்பக்கரை அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கால் 7வது நாளாக தொடர்ந்து குளிக்க தடை நீடிக்கிறது. இதனால், சுற்றுலா பயணிகள் வருகையின்றி அருவி வெறிச்சோடியது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு மழைக்காலங்களில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து இருக்கும்.
அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதித்து கடந்த 18ம் தேதி தடை விதித்து வனத்துறையினர் அறிவித்தனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், 7வது நாளாக நேற்றும் குளிக்க தடை தொடர்கிறது. அருவிக்கு வரும் நீரின் அளவு குறைந்து சீராகும் வரை இந்த தடை தொடரும் என தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறை அதிகாரி அன்பழகன் தெரிவித்தார். சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் கும்பக்கரை அருவி வெறிச்சோடியது.
The post தொடரும் வெள்ளப்பெருக்கால் நீடிக்கும் தடை சுற்றுலாப்பயணிகளின்றி கும்பக்கரை அருவி ‘வெறிச்’ appeared first on Dinakaran.