அரூர், அக்.19: அரூர் தீயணைப்பு துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில், அரூர் வள்ளிமதுரை நீர்த்தேக்கத்தில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது, இடி, மின்னலால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, வீடு, தொழிற்சாலைகளில், அடுக்குமாடி கட்டிடங்கள் ஆகிய இடங்களில் மின் கசிவினால் ஏற்படும் தீ விபத்துகள், காஸ் சிலிண்டர் கசிவினால் ஏற்படும் விபத்துகளில் தீயை அணைப்பது, தீ விபத்தில் மாட்டி கொண்டவர்களை கயிறு, ஏணி மூலம் மீட்பது, வெள்ளத்தில் விழுந்து தத்தளிக்கும் ஒருவரை எவ்வாறு மீட்பது என்பது குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அரூர் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் தலைமை வகித்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் காமராஜ் தலைமையிலான குழுவினர் ஏழுமலை, மணிகண்டன், ஈஸ்வரன், பிரபு, அன்பரசன், சரவணன், ராகேஷ் பாண்டியன், சேகர் ஆகியோர் செயல் விளக்கம் அளித்தனர். இதில் தாசில்தார் ராமச்சந்திரன், துணை தாசில்தார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி appeared first on Dinakaran.