×
Saravana Stores

கூட்டுறவு கல்வி நிதி தொகை வழங்கல்

தூத்துக்குடி, அக். 19: தூத்துக்குடி வட்ட உதவிபெறும் பள்ளி. கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் 2022-23ம் ஆண்டுக்கான நிகர லாபத் தொகையில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி மற்றும் கூட்டுறவு கல்வி நிதி தொகை ரூ.1,34,272க்கான காசோலையை சங்கத்தின் செயலாட்சியர் இளன்மாறன், தூத்துக்குடி மண்டல இணை பதிவாளர் (கூடுதல் பொறுப்பு) நடுக்காட்டு ராஜாவிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியின்போது தூத்துக்குடி சரக துணை பதிவாளர் (கூடுதல் பொறுப்பு) சக்தி பெமிலா, தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் சாம் டேனியல் ராஜ், மற்றும் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post கூட்டுறவு கல்வி நிதி தொகை வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Thoothukudi Circle Relief School ,Tamil Nadu Cooperative Co-operative Union ,College Teachers and Staff Co-operative Savings Currency Association ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி அருகே மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு