மும்பை: மும்பை ஒர்லியில் உள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துக்கு நேற்று முன்தினம் வாட்ஸப் உதவி எண்ணுக்கு ஒரு செய்தி வந்திருந்தது. அதில் நடிகர் சல்மான் கான் ரூ.5 கோடி தர வேண்டும் என மிரட்டல் விடப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மிரட்டல் விடுத்த மர்ம நபர் பற்றி விசாரனை நடத்தி வருகின்றனர். நடிகர் சல்மான்கான் கடந்த 1998ம் ஆண்டு ராஜஸ்தானில் வைத்து அபூர்வ வகை மானை வேட்டையாடினார். இந்த மானை பிஷ்னோய் சமூக மக்கள் தெய்வமாக வணங்குகின்றனர்.
இந்த வழக்கில் சல்மான்கான் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வெளியில் வந்தார். ஆனாலும் மானை வேட்டையாடியதற்காக சல்மான் கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் வலியுறுத்தி வந்தார். மேலும் சல்மான்கானுக்கு தொடர் மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட பாந்த்ராவில் உள்ள சல்மான்கான் வீட்டின் முன்பு பிஷ்னோய் கும்பலால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. குறிப்பிடத்தக்கது.
The post நடிகர் சல்மான்கானிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.