டெல்லி :நாடு முழுவதும் குழந்தை திருமணங்களைத் தடுக்க கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. குழந்தை திருமணம் தொடர்பான சட்டத்தை சில மாநிலங்கள் முறையாக கடைப்பிடிக்காததால் நாட்டில் குழந்தை திருமணம் அதிகரித்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் தன்னார்வ அமைப்பு ஒன்று பொதுநல வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை, தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, ஜே.பி.பார்த்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று(அக்.,18) விசாரித்தது. அப்போது நாடு முழுவதும் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தை செயல்படுத்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து தீர்ப்பு அளித்தது. அவை பின்வருமாறு..
*சிறுவர்களின் பாதுகாப்பில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
*குழந்தை திருமணத்தைத் தடுக்க அனைத்து அரசு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
*நாடு முழுவதும் குழந்தை திருமணங்களை தடுக்க கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
*குழந்தை திருமணங்களை தண்டனை அடிப்படையில் தடுக்க முயல்வது பயனற்றது.
*குழந்தை திருமண விவகாரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது கடைசி முயற்சியாக இருக்க வேண்டும்” என்ற வழிகாட்டு நெறிமுறைகள் இடம்பெற்றுள்ளன.
The post குழந்தை திருமணங்களை தண்டனை அடிப்படையில் தடுக்க முயல்வது பயனற்றது : புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட உச்சநீதிமன்றம்! appeared first on Dinakaran.