- தாம்பரம்
- CBCID
- புதுச்சேரி
- பாஜக
- செல்வாகானபதி
- சென்னை
- ராஜ்ய சபா
- செல்வாகானபதி
- நெல்லை எக்ஸ்பிரஸ்
- மக்களவைத் தேர்தல்
- தின மலர்
சென்னை: தாம்பரத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சுமார் ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் புதுச்சேரி மாநில பாஜக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான செல்வகணபதிக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. மக்களவை தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்றிருந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.3 கோடியே 98 லட்சம் ரொக்கம் பிடிபட்டது. அப்போது பாஜக வேட்பாளராக இருந்த நயினார் நாகேந்திரனுக்காக பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு சொந்தமான ஹோட்டல் ஊழியரான சதிஷ் என்பவர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதை தொடர்ந்து வழக்கின் விசாரணை தாம்பரம் காவல் நிலைய போலீசிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், பாஜக நிர்வாகி எஸ். ஆர் சேகர் உள்ளிட்ட 25 பேரிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தி முடித்துள்ளது. செல்போன் உரையாடல்கள் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் புதுச்சேரி பாஜக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான செல்வகணபதி உள்ளிட்ட 3 பேருக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த 3 பெயரில் ஹவாலா ப்ரோக்கர்கள் என்று சிபிசிஐடியால் சந்தேகிக்கப்படும் சௌகார்பேட்டையை சேர்ந்த பங்கஜ், என்.எஸ்.சி பகுதியை சேர்ந்த சூரஜ் ஆகியோரும் அடங்குவர் இந்த 3 பேரும் 26ஆம் தேதி ஆஜராக வேண்டும் என சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தாம்பரம் அருகே ரூ.4 கோடி பிடிப்பட்ட வழக்கு: புதுச்சேரி பாஜக தலைவர் செல்வ கணபதி எம்.பி.க்கு சிபிசிஐடி சம்மன் appeared first on Dinakaran.