பீகார்: பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் உயிரிழந்துள்ளனர். 79 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 21 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 30 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார் என்று சிவான் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. பீகார் மாநிலம் சிவான் மற்றும் சரண் மாவட்டங்களில் உள்ள பலர், உள்ளூரில் இருக்கும் கடை ஒன்றில் இருந்து கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர். பின்பு வீட்டிற்கு சென்ற அவர்களுக்கு வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 49 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் தற்போது சிவான் மற்றும் சரண் மாவட்டங்களிலும் மொத்தம் 28 பேர் பலியாகியுள்ளனர்.
தொடர்ந்து பலரும் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக இரண்டு ஊராட்சி அதிகாரிகள் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் மாநில அரசு சார்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கள்ளச்சாராயம் குடித்ததில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 79 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் 21 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். இதில் 30 பேர் வரை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டனர். மேலும் இந்த தகவலை சிவான் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் உயிரிழப்பு: மேலும் 21 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை appeared first on Dinakaran.