- சித்தார்த்தா
- திராவிதா
- அமைச்சர்
- சேகர்பபு
- சென்னை
- இந்து மதம்
- சமய
- விவகாரங்களில்
- இந்து சமய நிறுவனம் அலுவலகம்
- நுங்கம்பாக்,
சென்னை: சித்தர்களுக்கு விழா எடுத்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் சென்னை மண்டல திருக்கோயில்கள் சார்பில் நடைபெற உள்ள திருமண விழாக்களை முன்னிட்டு மனமக்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமைதாங்கி மணமக்களுக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், சித்தர்களுக்கு விழா எடுத்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என கூறினார்.
மேலும்மழை குறித்து அவர் பேசியதாவது, துணை முதலமைச்சருக்கு பெருமழை சவாலாக இருந்ததாகவும், அந்த பெருமழையை திறமையாக துணை முதலமைச்சர் சமாளித்ததாகவும் மக்கள் பாராட்டி வருகின்றனர். உதயநிதியை மட்டும் முன்னிலைப்படுத்துவது ஏன் ஏன எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு சென்னை மழை பாதிப்பு பணியில் துணை முதலமைச்சர் மட்டும் ஈடுபடவில்லை, அவருக்கு உதவியாக அனைத்துத்துறை அமைச்சர்களும் பணி செய்தாகக் அவர் பதிலளித்தார். மேலும், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு லட்டு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் 11 திருக்கோயில்களில் முழு வேலை அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சித்தர்களுக்கு விழா எடுத்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. திருக்கோயில்களின் சார்பில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில தான் மகாசிவராத்திரி விழா திமுக ஆட்சியில் தான் முதல் முதலில் நடத்தப்பட்டுள்ளது. புதிதாக இந்த ஆண்டு இரண்டு திருக்கோயில்களில் மகா சிவராத்திரி விழா நடத்தப்பட உள்ளது. 1020 பேர் அறுபடை வீடுகளில் கட்டணம் இல்லாத தரிசனத்தை பெற்றுள்ளனர். முதல்வரின் இலவச கட்டணமில்லா திருமண திட்டத்தின் மூலம் 700 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்படவுள்ளது. அக்டோபர்.21இல் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் 31 ஜோடிகளுக்கு முதல்வர் தலைமையில் திருமணம் நடைபெற உள்ளது. வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் நிச்சயம் அமைக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.
The post சித்தர்களுக்கு விழா எடுத்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சி: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.