×
Saravana Stores

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டகளில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில், சென்னையில் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில், இன்று காலை 10 மணி வரை சென்னை உள்பட 9 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், எனவே இந்த மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை இப்போதுதான் ஒரு பெரிய மழை ஆபத்திலிருந்து நீங்கிய நிலையில், மீண்டும் மழை பெய்யும் என்ற அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தமிழகத்தில் 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai Meteorological Centre ,Chennai ,Indian Meteorological Centre ,Northeast ,
× RELATED வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை கூடுதலாக பெய்துள்ளது