×
Saravana Stores

சர்வதேச உடற்காய தினத்தையொட்டி விபத்து பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

மேலூர், அக். 18: மேலூர் அரசு மருத்துவமனையில், சர்வதேச உடற்காய தினத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு தலைமை மருத்துவர் ஜெயந்தி தலைமை வகித்தார். விழிப்புணர்வு பேரணியை மேலூர் நகர் மன்ற தலைவர் முகமது யாசின் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி, அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி பேங்க் ரோடு வழியாக பேருந்து நிலையம் சென்றடைந்தது. பின்னர் அங்கு மாணவ, மாணவிகள் மனித சங்கிலியாக நின்று சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் மேலூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர் கண்காணிப்பாளர்கள், செவிலியர்கள், கிரசன்ட் செவிலியர் பயிற்சிப்பள்ளி மாணவிகள், மேலூர் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள், காவல்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து மேலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற அடிப்படை முதலுதவி குறித்த செயல்முறை பயிற்சியில் பொதுமக்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து தீயணைப்பு துறையினரால் பாதுகாப்பாக தீ விபத்து மற்றும் பாதிப்புகளை கையாளும் முறைகள் குறித்த நேரடி செயல் விளக்கம் நடைபெற்றது.

The post சர்வதேச உடற்காய தினத்தையொட்டி விபத்து பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Accident Safety Awareness Rally ,International Physical Injury Day ,Melur ,International Injury Day ,Mellur Government Hospital ,Chief Doctor ,Jayanthi ,Mellur Nagar Council ,President ,Dinakaran ,
× RELATED மேலூர் அருகே மாநில செஸ் போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு