- அரசாங்க தலைமை மருத்துவமனை
- தனியார் வார்டு
- பெரம்பலூர்
- தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம்
- அரசு பொது மருத்துவமனை
- தமிழ்
- தமிழ்நாடு
- மாவட்டம்
- ஜனாதிபதி
- சக்ரபாணி
- தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம்
- தானி
- வார்டு
பெரம்பலூர், அக்.18: அரசு தலைமை மருத்துவ மனையில் கட்டணமில்லா சிகிச்சை, அறுவை சிகிச்சைபெற, தனி வார்டு அமைத்துத்தர தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் சக்கரபாணி தலைமையில் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் சிங்கப்பெருமாள், துணைத் தலைவர்கள் பழனிமுத்து, செல்வராஜ், என்ஜிஓ மாவட்ட பொருளாளர் இளங்கோ, தங்கராஜ், செல்லையா உள்ளிட்டோர் நேற்று (17ம் தேதி) பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் கிரேஸ் பச்சாவிடம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது :
அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பெரம்பலூர் மாவட்ட அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில், அரசாணை எண்.130-ன் படி ‘‘கட்டணமில்லா சிகிச்சை ” மற்றும் அறுவை சிகிச்சை பெற, தனிவார்டு அமைத்துத் தர மருத்துவத் துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட கலெக்டர் கிரேஸ் பச்சா, பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
The post அரசு தலைமை மருத்துவமனையில் கட்டணமில்லா சிகிச்சை, தனிவார்டு appeared first on Dinakaran.