×
Saravana Stores

பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி புதியதாக டாஸ்மாக் கடைகளை திறந்தால் பூட்டு போடுவேன்

திண்டிவனம், அக்.18: திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக அரசு முதன்மை வாக்குறுதியாக அளித்த ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் மத்திய அரசு நிதி வழங்காததால் ஆசிரியர்களுக்கு செம்பம்பர் 10 தேதிக்கு பின் சம்பளம் வழங்கியது. கல்வி, சுகாதாரத்தை செயல்படுத்த நிதி ஒரு தடையில்லை. மொத்த உற்பத்தியில் கல்வி, சுகாதாரத்திற்கு 3 மடங்கு நிதி ஒதுக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது. தற்போது ரூ.1.56 லட்சம் கோடியாகவும், சுகாரத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி இருக்க வேண்டும்.

ஆனால் தற்போது கல்வித்துறை நிதி ரூ.44 ஆயிரம் கோடியாகவும், சுகாதாரத்துறைக்கு ரூ.20,198 கோடியாகவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிகல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை சீரழிய அதற்கு போதுமான நிதி ஒதுக்காததே காரணமாக உள்ளது. பள்ளிக்கு ஆசிரியர்களை நியமிக்கவில்லை. முதன்மை மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துகள் இல்லை. வரும் ஆண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.1 லட்சம் கோடியும், சுகாதாரத்துறைக்கு ரூ.50 ஆயிரம் கோடியாக நிதியையும் உயர்த்தி வழங்கிட வேண்டும்.

சென்னையின் பல இடங்களில் இன்னமும் வெள்ளம் வடியவில்லை. வெள்ளதடுப்பு பணிகள் முடிக்காததால் மழையினால் மக்கள் அஞ்சி நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும். விழுப்புரம், கள்ளகுறிச்சி மாவட்டங்களில் 195 டாஸ்மாக் கடைகள் உள்ளன. விழுப்புரத்தில் 109, கள்ளகுறிச்சியில் 86 கடைகள் உள்ள நிலையில் கொந்தமூர், நல்லாவூர்,வெள்ளிமலை பகுதிகளில் 3 மதுக்கடைகளை திறப்பது கண்டிக்கதக்கது. படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக கூறும் அரசு புதியதாக கடைகளை திறப்பதை ஏற்க முடியாது.

வெள்ளிமலையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க டாஸ்மாக் கடை திறக்கப்படுவதாக கூறுவது அரசின் தோல்வியை காட்டுகிறது. டாஸ்மாக் கடைகள் திறந்தால் நானே அக்கடைகளுக்கு சென்று பூட்டு போடுவேன். மத்திய அரசு பணியாளர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் தமிழக அரசும் 3 சதவீத அகவிலைப்படி வழங்கி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணையை வலுப்படுத்தி 152 அடியாக உயர்த்தலாம் என்று 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும் இன்னமும் உயர்த்தப்படாமல் இருக்க கேரள அரசு ஒத்துழைக்காதது தான் காரணமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

The post பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி புதியதாக டாஸ்மாக் கடைகளை திறந்தால் பூட்டு போடுவேன் appeared first on Dinakaran.

Tags : Ramadas ,Bamaka ,Tasmac ,Tindivanam ,Bamaga ,Thilapuram Estate ,central government ,DMK government ,Dinakaran ,
× RELATED இனியாவது மதுக்கடைகள் மூடப்படுமா?: பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி