புதுடெல்லி: நாட்டில் நேரடி வரி வசூல் 19.60 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது குறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் வருமான வரி வசூல் 182 % உயர்ந்து 2023-24ம் நிதியாண்டில் வரி வசூல் ரூ.19.60 லட்சம் கோடி கிடைத்துள்ளது. மோடி தலைமையிலான அரசு முதன்முதலாக பதவியேற்ற 2014-15 ஆண்டில் நேரடி வரி வசூல் 6.96 லட்சம் கோடி. இதில் கார்ப்பரேட் வரி 4.29 லட்சம் கோடி, தனிநபர் வருமான வரி வசூல் 2.66 லட்சம் கோடி. அந்த ஆண்டில் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் 4.04 கோடியாக இருந்தது. அது தற்போது 8.61 கோடியாக உயர்ந்துள்ளது. வரி செலுத்துவோர் எண்ணிக்கை 5.70 கோடியில் இருந்து 10.41 கோடியாக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நாட்டில் நேரடி வரி வசூல் ரூ.19.60 லட்சம் கோடியாக உயர்வு appeared first on Dinakaran.