×

சமூக வலைத்தளங்கள் மூலம் கொலை மிரட்டல்: திடீர் சாமியார் அன்னபூரணி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சென்னை திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த இயற்கை ஒலி(ளி) பவுண்டேசன் நிறுவனர் அன்னபூரணி அரசு(41) என்ற பெண் சாமியார் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் திருமுல்லைவாயல் திருமலைவாசன் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். நான் இயற்கை ஒலி(ளி) என்ற பெயரில் ஆன்மிக தீட்சை கொடுத்து, ஆன்மிக பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருகிறேன். கடந்த 19ம் தேதி செங்கல்பட்டு வாசகி மஹாலில் ஆன்மிக பயிற்சிக்கான ஏற்பாடு செய்யப்பட்டு நல்ல முறையில் நடைபெற்றது. அதை தொடர்ந்து 24ம் தேதி சமூக வலைத்தளங்களில் எனது ஆன்மிக சேவையை தவறாக சித்தரித்து வதந்தி பரப்பட்டது.மேலும், எனது கணவர் மாரடைப்பால் இறந்ததை மர்ம மரணம், இறப்பில் சந்தேகம் என தவறாக வதந்தி பரப்புகிறார்கள்.அதை தொடர்ந்து பல்வேறு யூடியூப் சேனல்களிலும் பேஸ்புக் பக்கத்திலும் எந்தவித முகாந்திரமும் இல்லாமல் தொடர்ந்து என் மீதும் எனது ஆன்மிக சேவை மீதும் எனது சீடர்கள் குறித்தும் கொச்சைப்படுத்தி தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இது எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறது. தொடர்ந்து பல்வேறு நபர்கள் எனக்கு போன் செய்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். நீ ஆன்மிக வேலையில் ஈடுபட கூடாது என்றும் மீறி செயல்பட்டால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று மிரட்டல் விடுக்கப்படுகிறது. மேலும், வாட்ஸ் அப் மூலமும் பல்வேறு செல்போன் எண்களில் இருந்தும் மிரட்டல் வருகின்றன.இதனால் எனது ஆன்மிக சேவை பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளது. எனது நற்பெயருக்கும் புகழுக்கும் வேண்டுமென்றே களங்கம் கற்பிக்கிறார்கள். எனக்கும் எனது சீடர்கள் உயிருக்கும் எந்நேரமும் அச்சுறுத்தலும் ஆபத்தும் இருந்து வருகிறது. எனவே மேற்படி குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எனக்கும் எனது சீடர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.* நான் சாமியார் இல்லை மக்கள்தான்என்னை ஆதிபராசக்தி என்கிறார்கள்போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த பிறகு அன்னபூரணி அரசு நிருபர்களிடம் கூறியதாவது: ‘போலி சாமியார் என சிலர் பொய்யாக கூறி வருகின்றனர். நான் எங்கும் தலைமறைவாகவில்லை. ஆன்மிக பணி மட்டும் செய்து வருகிறேன். சாமியார் என நான் ஒரு போதும் கூறவில்லை. மக்கள்தான் ஆதிபராசக்தி என்கின்றனர். ஒரு போதும் அருள்வாக்கு தரவில்லை. இறுதியில் சத்தியம் தான் ஜெயிக்கும். தர்மம் தான் நிலைநாட்டும்’ என்றார்….

The post சமூக வலைத்தளங்கள் மூலம் கொலை மிரட்டல்: திடீர் சாமியார் அன்னபூரணி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் appeared first on Dinakaran.

Tags : Annapoorani ,Chennai ,Annapoorani Govt ,Nattiya Oli (Li) Foundation ,Tirumullaivayal ,Chennai Police Commissioner ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!