- நிதிஷ்
- பாஜக
- கூட்டணி தலைவர்கள்
- மோடி
- புது தில்லி
- பீகார்
- முதல் அமைச்சர்
- நிதீஷ் குமார்
- பி.ஜே.பி கூட்டணி
- தலைவர்கள் மற்றும் துணை முதல்வர்கள்
- Aryana
- நயாப்சிங் சயானி
புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நடந்த பா.ஜ கூட்டணி முதல்வர்கள், துணை முதல்வர்கள் மாநாட்டை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியானா முதல்வர் நயாப்சிங் சயானி பதவி ஏற்ற பிறகு அரசியலமைப்பு சட்டத்தின் 50வது ஆண்டு விழாவை கொண்டாட பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் சண்டிகரில் நேற்று ஒன்று கூடினார்கள். பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் கலந்து கொண்டனர். கூட்டணி கட்சியான ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணைமுதல்வர் அஜித்பவார் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். பாஜ சார்பில் 13 முதல்வர்கள் மற்றும் 16 துணை முதல்வர்கள் இதில் கலந்து கொண்டனர். ஆனால் ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் மட்டும் இந்த மாநாட்டில் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post பிரதமர் மோடி தலைமையில் நடந்த பா.ஜ கூட்டணி முதல்வர்கள் மாநாட்டை புறக்கணித்தார் நிதிஷ் appeared first on Dinakaran.