×

ஜார்கண்ட், மகாராஷ்டிராவில் ஆம் ஆத்மி போட்டி இல்லை

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 20ம் தேதியும் ஜார்க்கண்டில் உள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் 2 கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 2 மாநில தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த தேர்தல்களில் அந்த கட்சி போட்டியிட போவதில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மாறாக, டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் கூடுதல் கவனம் செலுத்தவும், இந்தியா கூட்டணியை பலப்படுத்தவும் இந்த முடிவை ஆம் ஆத்மி எடுத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post ஜார்கண்ட், மகாராஷ்டிராவில் ஆம் ஆத்மி போட்டி இல்லை appeared first on Dinakaran.

Tags : AAP ,Jharkhand, Maharashtra ,New Delhi ,Maharashtra ,Jharkhand ,Aam Aadmi Party ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் பதிவான...