சென்னை: தமிழ் தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதால் வரை தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கெனவே பொதிகை என்ற பெயரில் செயல்பட்ட தொலைக்காட்சி டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. டிடி தமிழ் தொலைக்காட்சிக்கு காவி நிறத்தில் லோகோ உருவாக்கப்பட்டதற்கும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில் டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையம் சார்பில் இந்தி மாத கொண்டாட்டங்கள் நடத்தப்படுவதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு இந்தி திணிப்பு முயற்சியில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்தி மாத கொண்டாட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தி மாத கொண்டாட்டத்தை ஒட்டி ஓராண்டாக டிடி தமிழ் ஊழியர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டன. சென்னை தொலைக்காட்சி நிலையம் சார்பில் இந்தி மாத கொண்டாட்டங்களை ஒட்டி ஓராண்டாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. நாளை நடைபெறும் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார்
இந்தியை திணிப்பதையே ஒன்றிய அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் செயல் அப்பட்டமான மோசடித்தனம். மக்களின் வரிப்பணத்தில் நடத்தும் தொலைக்காட்சியை இந்தி திணிப்புக்கு பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது என்றும் கூறியுள்ளது.
The post டிடி தமிழ் தொலைக்காட்சியில் இந்தி மாத கொண்டாட்டத்தால் சர்ச்சை: தமிழ் ஆர்வலர்கள் கண்டனம் appeared first on Dinakaran.