டெல்லி: நவம்பர் 1-ம் தேதி முதல் ரயில்களில் முன்பதிவு செய்வதற்கான அவகாசம் 120 நாட்களில் இருந்து 60-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. 120 நாட்கள் அவகாசத்தின் கீழ் அக் 30-ம் தேதி வரை முன்பதிவு செய்தவர்களுக்கான டிக்கெட்டுகள் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 365 நாட்கள் என்ற வரம்விலும் எந்த மாற்றமும் இருக்காது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
60 நாட்களுக்கு அப்பால் செய்யப்பட்டுள்ள முன்பதிவுகளை ரத்து செய்வதற்க்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. தாஜ் எக்ஸ்பிரஸ், கோமதி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட குறிப்பிட்ட பகல்நேர விரைவு ரயில்களில் முன்பதிவு செய்வதற்கான குறைந்த நேர வரம்புகள் தற்போது நடைமுறையில் உள்ள நிலையில் அதில் எந்த வித மாற்றமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மக்கள் அனைவரிடமும் எடுத்து செல்வது தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரங்களும், விளம்பரங்களும் செய்யப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post நவம்பர் 1-ம் தேதி முதல் ரயில்களில் முன்பதிவு செய்வதற்கான அவகாசம் 120 நாட்களில் இருந்து 60-ஆக குறைப்பு appeared first on Dinakaran.