×
Saravana Stores

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி மற்றும் நெல்லூருக்கு இடையே கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி மற்றும் நெல்லூருக்கு இடையே கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்தது; ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழ்நாட்டின் மேல் நிலவுகிறது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.

இந்த நிலையில் , தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . மேற்கு வட மேற்கு திசையில் வட தமிழ்நாடு ஆந்திர கடற்கரை பகுதிகளில், புதுச்சேரி நெல்லூருக்கு இடையே சென்னைக்கு வடக்கே கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழ்நாட்டின் பகுதியில் மேல் தற்போது நிலவி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது .

The post காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி மற்றும் நெல்லூருக்கு இடையே கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Indian Meteorological Centre ,Puducherry ,Nellore ,Chennai ,South Andhra ,Dinakaran ,
× RELATED அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த...