×
Saravana Stores

ஒட்டன்சத்திரத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்ட ஆலோசனை கூட்டம்

 

ஒட்டன்சத்திரம், அக். 17: ஒட்டன்சத்திரம் ஒன்றிய அலுவலகத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டம், குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் அய்யம்மாள் தலைமை வகித்தார். ஐ.வாடிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜோதீஸ்வரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலைஞர் கனவு இல்ல வீடுகள் கட்டுவது பற்றியும், பழுதடைந்த வீடுகளை பராமரிப்பு செய்வது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வடிவேல்முருகன், காமராஜ் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

The post ஒட்டன்சத்திரத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்ட ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Otanchatram ,Othanchatram ,Union ,President ,Ayyammal ,Vadipatti Panchayat Council ,Jotheeswaran ,project ,Otanchatra ,
× RELATED ஒட்டன்சத்திரம் அருகே இரு விபத்துகளில் இருவர் பலி