×
Saravana Stores

திருவாரூர் மாவட்டத்தில் 250 அங்கன்வாடிகளில் காய்கறி தோட்டம்: குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் துவக்கி வைப்பு

 

திருவாரூர், அக். 16: திருவாரூர் ஒன்றியம், விளமலில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் காய்கறி விதைகளை அங்கன்வாடி பணியாளர்களிடம் குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் (பொ) புவனேஷ்வரி வழங்கி தோட்டத்தில் விதைகளை நடவு செய்து துவக்கி வைத்தார். பின்னர், அவர் கூறியதாவது: மாவட்டத்தில் 250 அங்கன்வாடிகளில் காய்கறி தோட்டம் அமைக்க பாலம் தொண்டு நிறுவனம், தேசிய பசுமை படை, பசுமை சிகரம் தொண்டு நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, அங்கன்வாடி மையத்தில் வெண்டை, கொத்தவரை, அவரை, கீரை, செடி முருங்கை, புடலை வகை காய்கறிகள் பயிர்செய்யப்பட்டு அந்த காய்கறிகள் குழந்தைகளுக்கு காய்கறியுடன் சத்துணவு வழங்கபட உள்ளன. இவ்வாறு, புவனேஷ்வரி தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில், பாலம் செந்தில்குமார், தேசிய பசுமைப்படை நடனம், குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் ஜெயந்தி, ஊட்டசத்து ஒருங்கிணைப்பாளர் அமர் கலந்து கொண்டனர்.

 

The post திருவாரூர் மாவட்டத்தில் 250 அங்கன்வாடிகளில் காய்கறி தோட்டம்: குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் துவக்கி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Vegetable Garden ,250 Anganwadis ,Tiruvarur District ,Child Development Program District Officer ,Tiruvarur ,P) Bhuvaneshwari ,Anganwadi ,Vilamal ,Union ,Garden ,Child Development Program District ,Officer ,
× RELATED திருவாரூர் மாவட்டத்தில்...