திங்கள்சந்தை, அக். 17: இரணியலை சேர்ந்தவர் ராஜேஷ் (51). கூலித்தொழிலாளி. மாற்றுத்திறனாளியான இவர் மூன்று சக்கர பைக் கேட்டு பிரின்ஸ் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு கொடுத்திருந்தார். இந்த மனுவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு அனுப்பிய பிரின்ஸ் எம்எல்ஏ தொழிலாளிக்கு மூன்று சக்கர பைக் கொடுக்க நடவடிக்கை எடுக்க கூறியிருந்தார். இது குறித்து விசாரணை நடத்திய மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தொழிலாளிக்கு மூன்று சக்கர பைக் கொடுக்க முடிவு செய்தது. இதையடுத்து மாற்று திறனாளிக்கு மூன்று சக்கர பைக் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. திங்கள்சந்தையில் உள்ள குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாரதி முன்னிலை வகித்தார். பிரின்ஸ் எம்எல்ஏ விலை இல்லா மூன்று சக்கர பைக்கை தொழிலாளி ராஜேசுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் காங்கிரஸ், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தொழிலாளிக்கு மூன்று சக்கர பைக் appeared first on Dinakaran.