- ரங்கசாமி
- விஜய் கட்சி மாநாடு
- புதுச்சேரி
- தேஜா கூட்டணி
- விஜய் கட்சி
- முதல் அமைச்சர்
- ரங்கசாமி
- தமிழ்நாடு வெற்றி கழகம்
- விக்கிரவாண்டி
புதுச்சேரி, அக். 17: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி படத்துடன் விஜய் கட்சி மாநாட்டு பேனர் புதுச்சேரியில் வைக்கப்பட்டுள்ளதால், தேஜ கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வரும் 27ம்தேதி புதுச்சேரி அடுத்த விக்கிரவாண்டியில் நடக்கிறது. இதையொட்டி புதுச்சேரியில் விளம்பர பேனர்கள், சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. கிழக்கு கடற்கரைச்சாலை கருவடிக்குப்பம் சிவாஜி சிலை அருகே வைக்கப்பட்டுள்ள பேனரில் விஜய் படத்துடன் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் படமும் இடம் பெற்றுள்ளது. அதில் 2026ல் ஆளப்போறான் தமிழன்’ என்ற வாசகத்துடன் வேட்டி – சட்டையுடன் விஜய் நடந்து வருகிறார். மறுபுறத்தில் முதலமைச்சர் ரங்கசாமி படமும் இடம் பெற்றுள்ளது.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்ஆர்காங்கிரஸ பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இதன் தலைவராக ரங்கசாமி இருந்து வருகிறார். அவரது நண்பரான புஸ்ஸி ஆனந்த் மூலம் நடிகர் விஜயை ரங்கசாமி சந்தித்ததோடு, விஜய் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மற்றொரு கட்சி விளம்பரத்தில் புதுச்சேரி முதல்வர் படம் இடம் பெற்றுள்ளது பாஜ வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ரங்கசாமியிடம் கேட்டபோது, அவங்க, அவங்க விருப்பம் உள்ளவர்கள், அவர்களின் படத்தை போடுகிறீர்கள். படத்தை போடுவது யார், யாரின் மீது விருப்பமோ, பற்றோ இருப்பவர்கள் படத்தை போட்டுக் கொள்கின்றனர் என்றார்.
The post விஜய் கட்சி மாநாட்டு பேனரில் ரங்கசாமி படம் appeared first on Dinakaran.