×

ஹார்டுவேர்ஸ் கடையில் திடீர் தீ விபத்து பல லட்சம் மதிப்பு பொருட்கள் சேதம் வந்தவாசி அருகே

வந்தவாசி, அக்.17: வந்தவாசி அருகே ஹார்டுவேர்ஸ் கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில், பல லட்சம் ரூபாய் மதிப்பலான பொருட்கள் எரிந்து சேதமானது. வந்தவாசி அடுத்த கொரசலவாடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(50). இவர் வந்தவாசி- சேத்துப்பட்டு நெடுஞ்சாலை மழையூர் பஜார் வீதியில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். ேநற்று முன்தினம் இரவு வழக்கம்போல் முருகன் கடையை பூட்டி வீட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலை ஹார்டுவேர்ஸ் கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது, அவ்வழியாக வந்தவர்கள் அருகே உள்ள வீடுகளில் உள்ளவர்களை எழுப்பி தகவல் கூறினர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்தவாசி மற்றும் தெள்ளார் தீ அணைப்பு துறையினர் விரைந்து வந்து, தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருந்தபோதிலும் கடையில் உள்ள பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் முழுவதுமாக எரிந்து சேதமானது.
இந்த சம்பவம் குறித்து முருகன் வடவணக்கம்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஹார்டுவேர்ஸ் கடையில் திடீர் தீ விபத்து பல லட்சம் மதிப்பு பொருட்கள் சேதம் வந்தவாசி அருகே appeared first on Dinakaran.

Tags : Vandavasi ,Murugan ,Korasalawadi ,Vandavasi- Sethupattu Highway Marshiyur Bazar ,Dinakaran ,
× RELATED வீடியோ காலில் மிரட்டப்பட்ட வியாபாரி...