×
Saravana Stores

மதுவிலக்கு அமலில் உள்ள பீகாாில் கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் பலி: 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை

சரன்: மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் பலியாகி விட்டனர். 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பீகாரில் மது விற்பனை மற்றும் நுகர்வுக்கு 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிதிஷ்குமார் அரசு தடை விதித்தது. அதன்பின்னர் அங்கு கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து உள்ளது. இப்போது வரை அங்கு கள்ளச்சாராயம் குடித்ததால் 150க்கும் மேற்பட்டோர் இறந்ததாக சமீபத்தில் பீகார் அரசு ஒப்புக்கொண்டது.

இந்தநிலையில் நேற்று பீகாரின் சிவன் மற்றும் சரண் மாவட்டங்களில் கள்ள மதுபானம் அருந்தியதால் குறைந்தது 6 பேர் பலியாகி விட்டனர். 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிவன் மாவட்டத்தில் 4 பேரும், சரனில் 2 பேரும் பலியாகி விட்டனர். இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு கள்ளச்சாராயம் குடித்ததாகவும், அதன்பின் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலியானதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாகர் மற்றும் அவுரியா பஞ்சாயத்துகளின் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

The post மதுவிலக்கு அமலில் உள்ள பீகாாில் கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் பலி: 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Bikhail ,Saran ,Bihar ,Nitish Kumar government ,Dinakaran ,
× RELATED பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து...