சென்னை: ரூ.2 லட்சத்திற்கும் மேல் விற்பனையாகும் டாஸ்மாக் கடைகளில் 2 விற்பனை கவுன்ட்டர்கள் அமைக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செயல்படுகிறது. 2 லட்சத்திற்கும் மேல் விற்பனை உள்ள டாஸ்மாக் கடைகளில் 2 விற்பனை பிரிவுகள் அமைக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்கும் நடைமுறை வரவுள்ளதால் விற்பனையில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கும் விதமாக இந்த நடைமுறை கொண்டுவரப்படுவதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளின் விற்பனையை பொறுத்து ஏ,பி,சி,டி என 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தினமும் ரூ.2 லட்சத்திற்கும் மேல் வருமானம் வரும் 1000 கடைகள் ஏ பிரிவில் உள்ளன. இந்த 1000 கடைகளில் 2 விற்பனை பிரிவுகள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post ரூ.2 லட்சத்திற்கும் மேல் விற்பனையாகும் டாஸ்மாக் கடைகளில் 2 விற்பனை கவுன்டர்கள்: நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.