சென்னை: மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் நடைபெற்று வரும் வழித்தடங்களில் 394 மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மழைநீர் தேங்கும் இடங்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு ராட்சத பம்புகள் மூலம் மழை நீர் தேங்கிய இடங்களில் உடனடியாக நீர் வெளியேற்றப்பட்டது. கடந்த 14ம் தேதி முதல் தொடர்ந்து மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். மேலும் வடகிழக்கு பருவமழை முடியும் வரை கண்காணிப்பு பணி தொடரும். வடகிழக்கு பருவமழை தொடங்கிய போதிலும் இரண்டாம் கட்ட மெட்ரோ கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்படாத வகையில் தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
The post மெட்ரோ ரயில் வழித்தடங்களில் 394 மோட்டார்கள் மூலம் மழைநீர் வெளியேற்றம் appeared first on Dinakaran.