×

சென்னை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்

சென்னை: சென்னை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். கனமழையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. வங்கக் கடலில் மையம் கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை கரையை கடக்க உள்ளது. இதனால் இன்றும் சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. இதனால் சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இன்றும் விடுப்பு இருக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியல் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்றிரவு இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிட்டார். ‘சென்னை மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்’ என்று தனது அறிவிப்பில் அவர் கூறியுள்ளார். தெரிவித்துள்ளார்.

The post சென்னை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் appeared first on Dinakaran.

Tags : Chennai district ,Chennai ,Collector ,Rashmi Siddharth Jagade ,Thiruvallur ,Chengalpattu ,Kanchipuram ,
× RELATED சென்னையில் நாளை மறுநாள் வேலைவாய்ப்பு...