- சென்னை
- மையம்
- காஞ்சி
- செங்கல்பட்டு
- திருவள்ளூர்
- தென்மேற்கு வங்காளக் கடல்
- வட-தெற்கு ஆந்திரா
- புதுச்சேரி
- வானிலை மையம்
- தின மலர்
சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் விலக்கி கொள்ளப்பட்டது. தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம் – தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும், நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் வியாழக்கிழமை அதிகாலை கரையை கடக்கக்கூடும். சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் விலக்கி கொள்ளப்பட்டது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு 190 கி.மீ கிழக்கு தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. சென்னைக்கு 190 கி.மீ. கிழக்கு தென்கிழக்கிலும் புதுச்சேரிக்கு 250 கி.மீ. கிழக்கு வடக்கிலும் மையம் கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நெல்லூருக்கு 270 கி.மீ. தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் நகர்ந்து செல்கிறது.
முன்னதாக 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில், தற்போது நகரும் வேகம் 17கி.மீ. ஆக சற்று அதிகரித்துள்ளது. தெற்கு ஆந்திரா கடற்கரையில் புதுச்சேரி நெல்லூர் இடையே நாளை அதிகாலை சென்னை அருகே கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
The post சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்: வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட் appeared first on Dinakaran.