×

மீட்பு பணிகளில் இடைவிடாது பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு சிற்றுண்டி, பிரட், போர்வை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (16.10.2024) சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை மீட்பு பணிகளில் இடைவிடாது பணியாற்றி வரும் 600 க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு சிற்றுண்டி, பிரட், போர்வை உள்ளிட்ட உதவி பொருட்களை வழங்கினார்கள்.

தொடர்ந்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி மண்டலம் 9 க்குட்பட்ட 116 வது வார்டு வெங்கட்ரங்கம் பிள்ளை தெருவில் செயல்பட்டு வரும் மாநகராட்சி சமுதாய நலக் கூடத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள சமையல் கூடத்தில் உணவு சமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் சமுதாய கூட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமில் உள்ள மருந்துகள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்ததுடன், முகாமிற்கு வந்திருந்த பொதுமக்களிடம் மருத்துவ தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். சிறப்பு மருத்துவ முகாமில் 1 மருத்துவர். செவிலியர், மருந்தாளுநர் உள்பட 6 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதையும் பார்வையிட்டார்.

The post மீட்பு பணிகளில் இடைவிடாது பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு சிற்றுண்டி, பிரட், போர்வை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Tags : Udhayanidhi Stalin ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Deputy Chief Minister ,Udayanidhi Stalin ,Legislative Assembly ,Chepakkam Tiruvallikeni ,North East Monsoon ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்