- கிராம விவசாய வளர்ச்சி குழு
- தேவனூர் கிராமம்
- தப்பெட்டாய்
- கிராம விவசாயிகள் மேம்பாட்டுக் குழு
- துணை
- வேளாண்மை அலுவலர்
- சீனிவாசன்
- தின மலர்
தா.பேட்டை, அக்.16: தா.பேட்டை அருகே தேவானூர் கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் கிராம விவசாயிகள் முன்னேற்ற குழு விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வேளாண் மை துணை அலுவலர் சீனிவாசன் தலைமை வகித்தார். வேளாண்மை தொழில்நுட்ப வட்டார மேலாளர் வரகுண பாண்டியன் வரவேற்றார். வேளாண்மை உதவி அலுவலர் சதீஷ்குமார், கரும்பு ஆய்வாளர் கணேசன் துறை சார்ந்த திட்டங்கள் பற்றி பேசினார். வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் அசோக்குமார், உதவி பொறியாளர் சிவ.சண்முகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வேளாண் பொறியியல் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து ேபசினர்.
அப்போது தமிழக முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டங்கள் பற்றியும், நடப்பு ரபி பருவத்திற்கு ஏற்ற பயிர் உத்திகள், சாகுபடி தொழில் நுட்பங்கள், பயிர் காப்பீடு பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் தேவானூர் கிராமத்தை சார்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். ஏற்பாடுகளை அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மணி மற்றும் பிரசாத் செய்திருந்தனர்.
The post தேவானூர் கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்ற குழு விவசாயிகளுக்கு பயிற்சி appeared first on Dinakaran.