×

தஞ்சாவூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

 

தஞ்சாவூர், அக். 16: தஞ்சாவூர் தொழில் பயிற்சி நிலைய மைதானம் அருகே தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர்கள் தஞ்சாவூர்பூக் கார தெருவை சேர்ந்த ஸ்டாலின் (35). மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (39) என்பதும் திருட்டுத்தனமாக கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்டாலின், சதீஷ்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 68 கிராம் கஞ்சா, ரூ.11 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

The post தஞ்சாவூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Southern Police ,Inspector ,Jegadishan ,Tanjavur Vocational Training Station ,Dinakaran ,
× RELATED புழல் சிறைச்சாலையில் வாகனங்கள் ஏலம்