தேனி மலை முருகன் கோயிலில் அழகிய சுனைகள் இருக்கின்றன. அந்த சுனையில் இருந்துதான் அபிசேகத்திற்கு தண்ணீர் எடுத்து வருகின்றனர். இந்த சுனைக்கு ஓர் தனிச்சிறப்பு இருப்பதாகவும், அது பற்றிய விவரங்களையும் அப்பதி மக்கள் வியப்புடன் கூறுகின்றனர். அதாவது, புதுக்கோட்டை மன்னர் வனப்பகுதிக்கு வேட்டையாட சென்றபோது, மன்னருக்கு திடீரென கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவருக்கு வைத்தியம் பார்க்க வைத்தியர் யாரேனும் இருக்கிறார்களா? என்று உடன் வந்தவர்கள் தேடினர். அப்போது அங்கே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனிடம், இது குறித்து கேட்டபோது, இங்கு வைத்தியர் யாரும் இல்லை ஆனால் மருந்து இருக்கிறது என்று கூறினான்.
பின்னர், அருகில் இருக்கும் தேனி மலையை சுட்டிக்காட்டி, முருகன் அருள்புரியும் அந்த மலையில் இக்கும் சுனை நீரை கொண்டு வந்து மன்னருக்கு கொடுத்தால் வயிற்று வலி நீங்கும் என கூறினான். அவ்வாறே செய்ய மன்னருக்கு வலி நீங்கியது. அதன் பின்னர் மன்னரின் ஆணைப்படி தேனிமலை முருகன் ஆலயம் கட்டப்பட்டது என்று கூறுகின்றனர்.
The post மன்னர் பருகிய சுனை நீர் appeared first on Dinakaran.