×

மழைக்காலம் தொடங்கியதால் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

சாத்தூர், அக்.16: சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. எனவே சாத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு உற்பத்தி தடுப்பு பணி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து அடிக்கும் பணி நகராட்சி சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சாத்தூர் நகர்பகுதிகளில் உள்ள முக்கிய தெருக்கள் மற்றும் மழை நீர் தேங்கும் பகுதிகள், பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் பகுதிகள், கழிவுநீர் கால்வாய்கள் உள்ளிட்ட பகுதிகள், தினசரி காய்கறி சந்தை, பேருந்து நிலைய வளாகங்கள், கடைகள் உள்ள பகுதிகள், அரசு மருத்துவமனை வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் மூன்று சக்கர வாகனத்தின் மூலம் தெரு தெருவாக சென்று கொசு மருந்து புகை அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

The post மழைக்காலம் தொடங்கியதால் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Chaturthi ,Chaturh ,
× RELATED சாத்தூர் வெடி விபத்து: பட்டாசு ஆலை உரிமம் ரத்து