- ஆலடிப்பட்டி செல்லத்துரை
- உசிலம்பட்டி தொகுதி
- அமைச்சர்
- திருச்சுழி
- உசிலம்பட்டி
- தொகுதி ஆய்வாளர்
- தங்கம்தென்னராசு
- திமுக
- ஜனாதிபதி
- எம். ஸ்டால்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- 2026 சட்டமன்றத் தேர்தல்
- உசிலம்பட்டி
திருச்சுழி, அக்.16: உசிலம்பட்டி தொகுதி பார்வையாளராக நியமிக்கப்பட்ட ஆலடிபட்டி செல்லத்துரை, அமைச்சர் தங்கம் தென்னரசுவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். 2026 சட்டமன்ற தேர்தல் பணிக்காக தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை நியமனம் செய்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இவர்கள் ஒவ்வொரு தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் பணியை பார்வையிடுதல் போன்ற பணிகளை செய்ய உள்ளனர்.
இதன்படி, உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி பார்வையாளராக விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் ஆலடிபட்டி செல்லத்துரையை தலைமை கழகம் நியமனம் செய்துள்ளது. இதையடுத்து ஆலடிபட்டி செல்லத்துரை நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அவருக்கு தொகுதி பார்வையாளராக எவ்வாறு செயல்பட வேண்டுமென அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
The post உசிலம்பட்டி தொகுதி பார்வையாளராக ஆலடிபட்டி செல்லத்துரை நியமனம்: அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு appeared first on Dinakaran.