×

நெற்பயிரில் களைகளை கட்டுப்படுத்த மருந்து தெளிப்பில் விவசாயிகள் தீவிரம்

ஆர்.எஸ்.மங்கலம், அக்.16: ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில், நெல் பயிர்கள் முளைத்துள்ள நிலையில் களைக்கொல்லி மருந்து தெளிப்பதில் விவசாயி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் ஆனந்தூர் சுற்றுவட்டார பகுதியில் நெல் விதைக்கப்பட்டு முளைத்துள்ளது. இந்நிலையில் வயல்களில் நெல் பயிர்களுடன், முளைத்து வரும் களைகளால் நெல் பயிர்களின் வளர்ச்சி பாதிப்படைந்துள்ளன.

இதனால் வயல்களில் உள்ள களைகளை கட்டுப்படுத்தும் விதமாக ஆர்.எஸ்.மங்கலம் சுற்று பகுதிகளில் உள்ள விவசாயிகள் ஸ்பிரேயர் மற்றும் கைத்தெளிப்பான் மூலம் களைக்கொல்லி மருத்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வயல் வரப்புகளை சீரமைத்தல், களை பறித்தல் உள்ளிட்ட விவசாயப்பணிகளிலும் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post நெற்பயிரில் களைகளை கட்டுப்படுத்த மருந்து தெளிப்பில் விவசாயிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : RS Mangalam ,Anandur ,Dinakaran ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...