×

காவல் நிலையத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி ஊராட்சியை சேர்ந்த குகன்(24), பாக்கியராஜ்(23), சூர்யா (25)ஆகிய 3 பேரை கும்மிடிப்பூண்டி போலீசார் இரண்டு தினங்களுக்கு முன்பு விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்தனர். இந்நிலையில் கும்மிடிப்பூண்டி காவல் நிலையம் முன்புவந்து  வாலிபர்களின் உறவினர்கள் அவர்களை விடுவிக்கக்கோரி சாலை மறியல் ஈடுபட்டனர்.அப்போது பாக்கியராஜின் தாய் மகேஸ்வரி (50) மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதை அறிந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். வாலிபர்கள் மீது திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே மூன்றுபேரையும் அழைத்து விசாரணை நடத்தி வருவதாக உறவினர்களிடம் ஆய்வாளர் கூறினார்….

The post காவல் நிலையத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Gugan ,Pakyaraj ,Surya ,
× RELATED திருவள்ளூர் மற்றும் வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!!