×

துணை மின் நிலையங்களில் மழைநீர் புகாமல் நடவடிக்கை: மின்சாரத்துறை செயலர் ஆய்வு

சென்னை: கனமழையை ஒட்டி சென்னை பெரும்பாக்கம், கிட்ஸ் பார்க் துணைமின் நிலையங்களில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் நந்தகுமார் நேரில் ஆய்வு செய்தார். மழையினால் துணைமின் நிலையத்தில் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் எடுக்கப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார்.

மின் மோட்டார் மூலம் உடனுக்குடன் மழைநீரை வெளியேற்றவும், மழைநீர் உட்புகாத வண்ணம் மணல் மூட்டைகளை கூடுதலாக பயன்படுத்துமாறும் அறிவுறுத்தினார். அதேபோல், கனமழையால் மழைநீர் உட்புகுந்து மின்தடை ஏற்படின் பிற துணை மின் நிலையங்கள் மூலம் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

The post துணை மின் நிலையங்களில் மழைநீர் புகாமல் நடவடிக்கை: மின்சாரத்துறை செயலர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu Power Generation and Distribution Corporation ,Nandakumar ,Chennai Perumbakkam ,Kids Park ,
× RELATED மின்வாரிய தொழில்நுட்ப பணியில் கேங்மேன்: அரசு பதில்தர ஐகோர்ட் ஆணை