×

வீடியோ காட்சிகளை நீக்க நீதிபதி அறிவுறுத்தல் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் குறித்த கருத்துக்கள் நீக்கம்: உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் உத்தரவு

சென்னை: மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் குறித்த கருத்துகளை நீக்கம் செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சமீபத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொடர்பான வழக்கு விசாரணையில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சனிடம், மூத்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் கடுமையாக நடந்து கொண்டது சக வழக்கறிஞர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

அகில இந்திய பார்கவுன்சில், தமிழ்நாடு பார்கவுன்சில் உட்பட அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களும் வழக்கறிஞர்களை கண்ணியக்குறைவாக நடத்துவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வரை கடிதம் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆர். சுப்பிரமணியன் மற்றும் நீதிபதி விக்டோரியாகவுரி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது டி.என்.பி.சி சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ். பிரபாகரன் ஆஜராகி, இந்த வழக்கிலிருந்து நீதிபதி விலக வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் கேட்கவில்லை. நீதிமன்றத்தின் மேல் அவர் உரிய மரியாதை வைத்துள்ளார் என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஆர்.சுப்ரமணியன், நீதிமன்ற காட்சிகள் வெளியானது குறித்து சைபர் கமிட்டி விசாரணை நடைபெற்று வருகிறது. சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரித்து வருகிறோம்.

யார் பதிவு செய்தார்கள் என்பதை ஓரிரு நாட்களில் கண்டுபிடித்து விடுவோம். அந்த வீடியோ காட்சிகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் குறித்த கருத்துகள் நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை வேறு நீதிபதி முன்பு பட்டியிலிட உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார். விசாரணையின்போது, மூத்த வழக்கு பி.வில்சன் நீதித்துறைக்காகவும், நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் என்று மூத்த வழக்கறிஞரும் அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவருமான எஸ். பிரபாகரன் தெரிவித்தார்.

* நீதிமன்ற விசாரணை வீடியோ காட்சியை பதிவு செய்து, பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

The post வீடியோ காட்சிகளை நீக்க நீதிபதி அறிவுறுத்தல் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் குறித்த கருத்துக்கள் நீக்கம்: உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : WILSON ,SUPREME COURT ,Chennai ,High Court ,Madurai Branch ,Madurai High Court ,Tamil Nadu Civil Servants Selection Board ,Senior ,P. ,Justice ,R. Subramanian ,Superman ,Dinakaran ,
× RELATED கருணை மனு மீது குடியரசுத்தலைவர்...