×
Saravana Stores

ஊட்டி மலை ரயிலுக்கு ‘116வது பர்த்டே’

மேட்டுப்பாளையம்: ஊட்டி மலை ரயிலுக்கு இன்று 116வது பிறந்தநாளையொட்டி ரயிலில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பயணம் செய்தனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1899ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி முதல் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலை ரயில் இயக்கப்பட்டது. 1908ம் ஆண்டு அக்டோபர் 15 முதல் ஊட்டி ரயில் நிலையம் வரை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் தேதி நீலகிரி மலை ரயில் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி ரயில் நிலையம் வரை ரயில் பாதையில் 16 குகைகள், 216 வளைவுகள், 250 பாலங்கள் உள்ளன.

ஆசியாவிலேயே மிக செங்குத்தான மீட்டர்கேஜ் ரயில் பாதையில் மிகவும் நீளமானது என்பது இதன் சிறப்பு அம்சம். நீலகிரி மலை ரயிலை யுனெஸ்கோ நிறுவனம் கடந்த 2005ம் ஆண்டு ஜூலை 15ல் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. இந்நிலையில் இன்று 116வது ஆண்டு விழாவை முன்னிட்டு ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர். இன்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து 184 பயணிகளுடன் ஊட்டிக்கு மலை ரயில் புறப்பட்டு சென்றது. இந்த ரயிலில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பயணம் செய்தனர்.

The post ஊட்டி மலை ரயிலுக்கு ‘116வது பர்த்டே’ appeared first on Dinakaran.

Tags : 116th ,Ooty ,Mountain ,Train ,Motuppalayam ,Ooty Mountain Railway ,Matuppalayam ,Gunnar ,Ooty Mountain Train ,
× RELATED கனமழை காரணமாக 2 நாட்களாக நிறுத்தப்பட்ட...