- சென்னை
- பாலசந்திரன்
- தென் மண்டல வானிலை ஆய்வு மையம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை ஆய்வு மையம்
- இந்திய வானிலை ஆய்வு மையம்
- தென் மண்டல வானிலை ஆய்வு
- தென் மண்டல வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்; வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மெதுவாக நகர்ந்து வருகிறது.
தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் வலு பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்; இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வடதமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது. தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
17-ம் தேதி திருப்பத்தூர், தருமபுரியில் மிக கனமழை பெய்யும். வடகிழக்கு பருவமழை இதுவரை 84% அதிகமாக பெய்துள்ளது. 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று மாலை, இரவில் மழை அதிகரிக்கும். மேல் நோக்கி செல்லும் காற்றின் வேகமும் கீழ்நோக்கி செல்லும் காற்றின் வேகமும் அதிகமாக இருந்ததால் இடி, மின்னல் ஏற்பட்டது. மேல் திசை, கீழ் திசைக் காற்றின் உராய்வு காரணமாக சென்னையில் இடி, மின்னல் அதிகமாக இருந்ததாக விளக்கம் அளித்துள்ளார்.
The post சென்னையில் இன்று மாலை, இரவில் மழை அதிகரிக்கும்: தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி appeared first on Dinakaran.