×
Saravana Stores

தொடர் மழை எதிரொலி.. சதுரகிரி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிப்பு..!!

ஸ்ரீவில்லிபுத்தூர்: தொடர் மழையின் காரணமாக சதுரகிரி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில். இந்த கோவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு கடந்த காலங்களில் தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பக்தர்கள் வரை உயிரிழந்தனர். இதனை அடுத்து மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சதுரகிரி மலைக் கோயிலில் அக்.15 முதல் 18ம் தேதி வரை புரட்டாசி மாத பிரதோஷம், பௌா்ணமி வழிபாடு நடைபெற உள்ளது. மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் தொடா்ந்து பலத்த மழை பெய்துவருவதால் மலைப் பாதையில் உள்ள ஓடைகளில் நீா் வரத்து அதிகரித்துள்ளது. வத்திராயிருப்பு மலைப் பகுதியில் அடுத்த 3 நாள்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பக்தா்களின் பாதுகாப்பு கருதி புரட்டாசி மாத பௌா்ணமி வழிபாட்டுக்கு சதுரகிரி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தொடர் மழை எதிரொலி.. சதுரகிரி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chathuragiri Hill Temple ,Srivilliputur ,Chaduragiri Mountain Temple ,Chaduragiri Sundara Mahalingam Temple ,Virudhunagar district ,
× RELATED கோயில்களில் தீபாவளி !