பட்டுக்கோட்டை, அக்.15: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்டுக்கோட்டை யில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தீயணைப்புத் துறையினர் செயல்விளக்கம் அளித்தனர். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தீயணைப்புத்துறையினர் செயல்விளக்கம் செய்து காட்டினர். நிகழ்ச்சியை பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெய தொடங்கி வைத்தார். வடகிழக்கு பருவமழை காரணமாக அதிகளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தண்ணீரில் மூழ்கியவரை எப்படி காப்பாற்றுவது? அதோடு மட்டுமல்லாமல் தன்னையும் எப்படி காப்பாற்றிக் கொள்வது? என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் மூலமாக காசாங்குளத்தில்காலி குடங்கள், தண்ணீர் கேன் உள்ளிட்டவைகளைக் கொண்டு செயல்விளக்கமாக செய்து காட்டினர். மேலும் தண்ணீரில் மூழ்கி ஒருவர் சுயநினைவை இழக்கும்பட்சத்தில் அவருக்கு எப்படி முதலுதவி அளிப்பது? என்பது குறித்தும்செயல்விளக்கம் செய்து காட்டினர்.
The post பட்டுக்கோட்டையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தீயணைப்புதுறை செயல்விளக்கம் appeared first on Dinakaran.