×

திண்டுக்கல் மாவட்டத்தில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்க நிர்வாகிகள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல், அக். 15: திண்டுக்கல் மாவட்டத்தில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் நிர்வாகிகள் பதவிகளுக்கு இஸ்லாமிய சமுதாயத்தினை சார்ந்த ஆண், பெண் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் சிறுபான்மையின சமுதாயத்தினை சார்ந்த பின்தங்கிய நிலையிலுள்ள முஸ்லிம் மகளிர்களுக்கு உதவும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில், முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் 2 ஆரம்பிக்க அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இச்சங்கத்திற்கு விதை தொகையாக ரூ.1,00,000 அரசால் அனுமதித்தும், இச்சங்கம் திரட்டும் நிதி ஆதாரத்திற்கேற்ப அரசின் உகந்த தொகையாக இணை தொகையினை 1:2 என்ற விகிதாச்சாரத்தின் அடிப்படையில் இரு பருவங்களையும் சேர்த்து பொருளாதாரத்தில் பின்தங்கிய இஸ்லாமிய மகளிர்கள் பயனடையும் வகையில் அதிகபட்சமாக ரூ.20,00,000 வரை மானிய தொகை வழங்கவும் அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம்- 2வில் கலெக்டர் சங்கத்தின் தலைவராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பொருளாளராகவும், இணை இயக்குநர் மகளிர் திட்டம் உப தலைவராகவும் செயல்படுத்தப்பட உள்ளது. புதிதாக தொடங்கப்பட உள்ள முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம்- 2விற்கு கவுரவ செயலாளர், இணை கவுரவ செயலாளர்- 2 நபர்கள், செயற்குழு உறுப்பினர்- 3 நபர்கள் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்ய வேண்டியுள்ளதால் திண்டுக்கல் மாவட்ட இஸ்லாமிய சமுதாயத்தினை சார்ந்த ஆண், பெண் இருபாலரும் தங்களது சுயவிபரத்துடன் சமுதாய மக்களுக்கு தங்களால் மேற்கொண்ட சேவைகளுடன் ஆதார், இனச்சான்று, குடும்ப அட்டையுடன் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பித்து பயன்பெறலாம்.  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post திண்டுக்கல் மாவட்டத்தில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்க நிர்வாகிகள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Dindigul District Muslim Women Aid Association ,Dindigul ,Collector ,Boongodi ,Muslim Women's Aid Society ,Tamil Nadu ,
× RELATED புத்தகங்கள் படிப்பதால் குற்றங்கள்...