×

மழைநீர் வடிகால் அமைக்க வணிகர் சங்கம் கோரிக்கை

 

கோவை, அக். 15: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோவை மாவட்ட தலைவர் இருதயராஜா, கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாநகரில் பெய்கிற கனமழையால் நேரு ஸ்டேடியம் பகுதியில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால், அங்கு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், நேரு ஸ்டேடியம் பகுதியில் மாநகராட்சி சார்பில் உள்ள அனைத்து கடைகளிலும் முழங்கால் அளவு மழைநீர் புகுந்துவிடுகிறது.

இது, மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. வியாபரம் செய்ய முடியாமல், வணிகர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்கிறார்கள். அவர்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிறது. மழை நின்ற பிறகும், மழைநீர் வடியாமல் தேங்கி நின்று, பொதுமக்களின் சகஜ வாழ்க்கையை பாதிப்படைய செய்கிறது. ஆகவே, மழைநீர் தேங்காமல் வடிந்துசெல்ல, உரிய வடிகால் வசதி செய்து கொடுக்க வேண்டும். அடுத்தடுத்து பெய்கிற மழையினால் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

The post மழைநீர் வடிகால் அமைக்க வணிகர் சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Federation of Tamil Nadu Merchants' Association ,Coimbatore District ,President ,Coimbatore Corporation ,Commissioner ,Sivaguru Prabhakaran ,Nehru Stadium ,
× RELATED கோவை மாவட்ட கால்பந்து சங்கத்துக்கு ஜன.5ல் தேர்தல்