×
Saravana Stores

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை: மீன்வளதுறை உத்தரவு

தண்டையார்பேட்டை: வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, மேலும் வலுவடைந்து, அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் பலத்த மழை மற்றும் சேதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இதனால், காசிமேடு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என, மீன்வளதுறை உதவி ஆணையர் செந்தில் குமரன் அறுவுத்தி உள்ளார். மேலும், மானிய விலையில் டீசல் வழங்கும் பெட்ரோல் பங்க்கும் மூடப்பட்டுள்ளது. தடையை மீறி மீனவர்கள் கடலுக்கு சென்றால் ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ் மானிய டீசல் வழங்குவது தடை செய்யப்படும் எனவும், அபராதம் விதித்து விசைப்படகு உரிமையாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

The post கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை: மீன்வளதுறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Fisheries Department ,Thandaiyarpet ,Bay of Bengal ,Tamil Nadu ,Andhra Pradesh ,
× RELATED இன்றுமுதல் மறு அறிவிப்பு வரும் வரை...