×
Saravana Stores

இலங்கை அரசு முடிவு: அதானி மின் திட்ட அனுமதி மறுபரிசீலனை செய்யப்படும்: உச்ச நீதிமன்றத்தில் தகவல்

கொழும்பு: இலங்கையின் மன்னார், பூநகரி ஆகிய பகுதிகளில் ரூ.3,700 கோடி செலவில், 484 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை மேற்கொள்ள அந்நாட்டு அரசுடன் அதானி குழுமம் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்தத் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடும் என்றும், ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் இலங்கை உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அதானி மின் திட்ட அனுமதி குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்திருப்பதாக புதிய அரசு தரப்பில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இலங்கை அரசு முடிவு: அதானி மின் திட்ட அனுமதி மறுபரிசீலனை செய்யப்படும்: உச்ச நீதிமன்றத்தில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka Govt ,Supreme Court ,Colombo ,Adani Group ,Government of Sri Lanka ,Mannar ,Poonagari ,Sri Lanka ,Lankan ,Adani ,Dinakaran ,
× RELATED நீதிதேவதை சிலையில் மாற்றம் செய்ய...