- எலந்தூர்
- கிரிஜாம்மா
- எலந்தூர் தாலுகாம்பள்ளி
- சாம்ராஜ்நகர் மாவட்டம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
எலந்தூர்: தேனீக்கள் கொட்டியதில் கரும்பு அறுவடை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் படுகாயமடைந்த சம்பவம் எலந்தூர் அருகே நடந்துள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்டம் எலந்தூர் தாலுகாமாம்பள்ளி கிராமத்தில் கிரிஜம்மா என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கரும்பு அறுவடை நடந்து கொண்டிருந்தது. இதில், தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, திடீரென தேனீக்கள் கொட்டியதில் தமிழக மாநிலம் தருமபுரி மாவட்டத்தின் காரிமங்கலம் கிராமத்தை சேர்ந்த முருகன், சீதா, கீதா, லிங்கம்மா, முருகன் மற்றும் சாந்தா ஆகியோர் படுகாயமடைந்து கொள்ளேகால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
The post தேனீக்கள் கொட்டியதில் தொழிலாளர்கள் காயம் appeared first on Dinakaran.