×
Saravana Stores

ரூ.5 ஆயிரம் கோடி கொகைன் பறிமுதல் போதைப்பொருள் நுழைவு வாயிலாக குஜராத் மாறிவிட்டதா?: காங்கிரஸ் சரமாரி கேள்வி

புதுடெல்லி: குஜராத்தில் ரூ.5,000 கோடி மதிப்புள்ள கொகைன் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலின் மகள் மும்தாஜ் படேல் கூறுகையில்,’ போதைப் பொருட்களுக்கான நுழைவு வாயிலாக குஜராத் மாறிவிட்டதா என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது. மக்களவைத் தேர்தலின்போது தேர்தல் ஆணையம் கைப்பற்றிய போதைப் பொருட்களில் 30% குஜராத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. . பாஜகதான் குஜராத்தை 30 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது’ என குற்றம் சாட்டினார்.

இதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பதிலில்,’ போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான வேட்டை எந்த தளர்வும் இல்லாமல் தொடரும். போதைப்பொருளின் கோரப்பிடியில் இருந்து இளைஞர்களை பாதுகாத்து போதையில்லா பாரதத்தை உருவாக்க மோடி அரசு உறுதி பூண்டுள்ளது. ரூ.13,000 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்த டெல்லி காவல்துறையின் தொடர் வெற்றிகரமான நடவடிக்கைகளுக்காக நான் வாழ்த்துகிறேன்.சமீபத்தில் குஜராத் காவல்துறை ரூ. 5,000 கோடி மதிப்புள்ள கொகைன் மீட்டெடுத்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post ரூ.5 ஆயிரம் கோடி கொகைன் பறிமுதல் போதைப்பொருள் நுழைவு வாயிலாக குஜராத் மாறிவிட்டதா?: காங்கிரஸ் சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Congress ,New Delhi ,Gujarat ,Ahmed Patel ,Mumtaj Patel ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED மீண்டும் ஓட்டுச்சீட்டு முறை வேண்டும்: காங். கருத்து